ஷரிஆ சட்டத்தின் கீழ் சவூதி அரேபியாவில் மரண தண்டணை அளிக்கப்பட்டுள்ள இலங்கை யுவதியான ரிஸானா நபீக்கின் விடயத்தில் முடிந்தளவு முயற்சிசெய்கிறோம் என அமைச்சரவை பதில் பேச்சாளரான அமைச்சருமான அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். மேலும் அவர் இதை பற்றி கூறுகையில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தவேண்டும். அரசாங்கம், வெளிவிவகார அமைச்சி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் பணியகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த விடயத்தில் மன்னரினால் நேரடியாக தலையிடமுடியாது நாம் முடிந்தளவு உதவிகளை செய்துள்ளோம் என்றார். ஷரிஆ சட்டத்தின் படி இரு தரப்பினரும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.