இலங்கைப் பணிப்பெண்னை கொலைச்செய்த சவூதி வேலை வழங்குநரிடமிருந்து 50ஆயிரம் ரியால் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்க குறித்த பெண்னின் குடும்பத்தினர் உடன்பட்டுள்ளனர் என இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

36வயதான பாவனிதேவி சின்னையா என்ற இலங்கைப் பணிப்பெண் கடந்த ஜனவரி 19ஆம் திகதி அவரது வேலை வழங்குநரால் கொலைச்செய்யப்பட்டார் . இம்மாத முற்பகுதியில் அவர் நாடு திரும்பும் இருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டார்.

ஆரம்பத்தில் மரணம் மர்மமானது என கூறப்பட்டாலும் வேலை வழங்குனர் சந்தேகத்தின்பேரில் கைதுச்செய்யப்பட்டார். இதனை அடுத்து நடந்தது கெலையே என பொலிஸார் உறுதிச்செய்தனர். திருமணமான குறித்த பெண் மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டு சவூதி அரபியாவுக்குச் சென்றிருந்தார்.

நாம் வேலை வழங்குநரின் தந்தையாருடன் தொடர்புக்கொண்டு பணிப்பெண்ணின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்குவது குறித்து பேச்சுக்களை நடத்தினோம். வேலை வழங்குநரின் தந்தையார் அதற்கு ஒத்துக்கொண்டர் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்தோடு அவருக்கு வழங்கப்படாத இரண்டு வருட சம்பளமான 16,245ரியாலையும் வழங்க வேலை வழங்குநரின் தந்தை உடன்பட்டுள்ளார். கொடுப்பனவுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சினூடாக வழங்கப்படும்- என தெரிவிக்கப்படுகிறது.